இரவு முடிந்ததும்
இனிமையாகத்தான் ஆரம்பிக்கிறது
என் ஒவ்வொரு அதிகாலையும்!
காலை எழுந்தவுடன்
"காபி போட இவ்வளவு நேரமா?"
அன்புக் கணவன் ஆரம்பித்து,
அடுக்களையில் எதிரொலித்து,
பிள்ளைகளை எழுப்பும்
சுப்ரபாதமாய் ஒலிக்கும்
எங்கள் சண்டைகள்,
தம்தம் வேலைகளை
கவனித்துக்கொண்டே
தொடர்கிறது!
அவரவர் வேலைக்கும்
பள்ளிக்குமாய் செல்ல
வெறிச்சோடி கிடைக்கிறது
வீடு!!!!!
கடை செல்ல,
காய்கறி வாங்க,
பிள்ளைகளை படிக்க வைக்க
பள்ளிக்கு அனுப்ப,-தொலை
பேசி கட்டணம் கட்ட,
இப்படியாக அனைத்திற்குமாய்
காத்திருக்கிறது எங்கள்
சண்டைகள்!!!
இன்றும் எழுகிறேன்
இனியாவது சண்டைகள் தொடர கூடாதென
இறைவனை வேண்டியபடியே!
ஆனாலும்........
எப்படியாவது கிடைத்து விடுகிறது
எங்களின் சண்டைகளுக்கான
விதைகள்!!!!!
// எப்படியாவது கிடைத்து விடுகிறது
ReplyDeleteஎங்களின் சண்டைகளுக்கான
விதைகள் !! //
அதுதானே வாழ்க்கையென அமைந்தும் விடுகிறது.. :)
புரிதல்களின் பகிர்ந்தளிப்பு தொடங்கிவிட்டால், விதைகள் தானாக துளிர்விட தான் செய்யும் தோழி..கணவனிடம் மனைவியும் மனைவியிடம் கணவனும் உரிமை எடுத்துக்கொள்ளல் தான் சண்டை (காதல்)
ReplyDelete--