Friday, July 30, 2010

தலைப்பற்ற கவிதையாய்...!!!


ஒற்றை தென்னை ..
அதனை வைத்திருக்கும்
சிறு நதி ஒன்று..
தனிமையில் உனக்காய் நான்..

சூரியன் வீசியெறிந்த
மஞ்சள் நிறம்
வானம் முழுதும்
சிதறுகிறது மென்மையாய்....

சொடுக்கெடுக்கும்
என் விரல்கள்
களைத்துப் போகின்றன...

கூடவே..
ஒற்றை தென்னையும்
அந் நதியும்
விசனப்படுகின்றன உன்னை
விசாரித்தபடியே ...

வர்ண கலவைகளில்
சேர்க்கப்படா
புது நிறமொன்றில்
தீட்டப்படுகின்றது
நிறமற்ற
நமது நாட்கள்...

உன் பார்வை என் மீது
வீசப்படுவது
தகிக்கின்ற வெப்பத்தினுள்
சில்லிடும் காற்று
புகுவது போன்றது..

புள்ளியினுள் பயணித்து
வரையப்படுகின்ற
கோலத்தினில்
விழுகிறது மழைத்துளி..
சலனப்பட்ட
என் மனம் போல்...

நதிக் கரையின்
கானங்களில் உன்
வாசம் படர்கிறது
அதனை....
அறிவித்தபடி காற்று
என் மீது நெடியதாய்
உனது வாசத்தை
படர்த்திவிட்டுச் செல்கிறது....

சிவக்கின்றேன் நான்...
சில்லிட்டுக் கொண்டிருந்தது
இத் தருணம்...

யாதொரு பெயருமிடாமல்
நீள்கிறது நம் உறவு...

7 comments:

  1. I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    ReplyDelete
  2. கவிதையின் ஊடே ஓடும் மெல்லிய உணர்வு ரொம்ப நல்லா இருக்கு தோழி.

    பதிவுலகில் நான் என்னும் ஒரு தொடர் பதிவிற்கு தங்களை
    அழைத்திருக்கிறேன். சமயம் அமையும் போது எழுத முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  3. ///வர்ண கலவைகளில்
    சேர்க்கப்படா
    புது நிறமொன்றில்
    தீட்டப்படுகின்றது
    நிறமற்ற
    நமது நாட்கள்..///

    superb...

    ReplyDelete
  4. நதிக் கரையின்
    கானங்களில் உன்
    வாசம் படர்கிறது
    அதனை....
    அறிவித்தபடி காற்று
    என் மீது நெடியதாய்
    உனது வாசத்தை
    படர்த்திவிட்டுச் செல்கிறது....

    சிவக்கின்றேன் நான்...
    சில்லிட்டுக் கொண்டிருந்தது
    இத் தருணம்...

    யாதொரு பெயருமிடாமல்
    நீள்கிறது நம் உறவு...



    இன்னும் தொடரட்டும் உங்கள் கவிதைகள் இந்த பதிவு உலகில் ...,

    ReplyDelete