மழைத் துளி கனத்த
ஓர் நாள்தான் நான்
வெறுமையை உணர்ந்தேன்..
சிறுவர்களின் சப்தங்கள்
வாகன இரைச்சல்கள்
அண்டை வீட்டாரின்
சண்டைகள்
என ஏதுமில்லா
வெறுமையினுள் புகுந்துள்ளேன்...
தினசரிகள் தீண்டப்படவில்லை
நாளிதழ்கள் புரட்டப்படவில்லை..
வீட்டினுள் ஏதும்
கலைக்கப்படவில்லை..
மனம் மட்டும் நிதமும்
துவைத்து பிழியப்படுகிறது...
காற்றினுள் வெறுமை
கூடியிருப்பதை
சுவாசத்தில் உணர்கிறேன்..
அது நுரையீரலையும்
அடைத்து நிரப்புகிறது....
மழைகளின் விசாரிப்புகள்
பேரிரைச்சலாய் உரைத்தது..
பாதை ஏதுமற்ற
காட்டினில் அலைகிறேன்..
தடுமாறுகிறேன்..விழுகிறேன்..
எதை தேடுகிறேன் எனவும்
மறந்து விடுகிறேன்....
சுருதி சேரா ராகத்தினை
மீட்டுவது போலிருந்தது
நான் தனிமையில்
உண்பதும்..உறங்குவதும்...
கடுங் குளிரில்
விடப்படும் மூச்சுக் காற்று
போதுமானதாகியிருந்தது..
கதகதப்பிற்கு..
இன்னும் பெய்து கொண்டுதான்
இருக்கிறது மழை.!!!
கவிதையை மிக அழகாக முடித்து இருக்கிறீர்கள்...
ReplyDeleteமிகவும் பிடித்திருக்கிறது தோழி...
வாழ்த்துக்கள்..
தொடருங்கள்...
///காற்றினுள் வெறுமை
ReplyDeleteகூடியிருப்பதை
சுவாசத்தில் உணர்கிறேன்..///
excellent...
மிகவும் நன்றி தங்களின் பின்னூட்டத்திற்கு Mr கமலேஷ் and செபா
ReplyDelete