Tuesday, July 20, 2010

பிரிந்துவிட்டிருந்த நீ....



விழி மூடும் தருணங்களில்
பிரபஞ்சத்தை நோக்கி
பயணிக்கறேன் உன்னை
தேடுதலின் பொருட்டு

காகம் குருவிகளிலும்
பறக்கும் பட்டாம் பூச்சியினுளும்
ஊரும் புழுக்களிலும்
தேடுகிறேன் உன்னை...

மலர்ந்த பூ
விரியா மொட்டுக்கள்
பட்ட மரம் என
எவற்றிலும்
தேடுகிறேன் உன்னை..

நீலம் போர்த்திய
கடலின் பேரமைதி
உணர்த்தியது நீ
அங்கு இல்லை என..

வெண்பஞ்சு பதிந்த
மேகத்திலும் அலைகிறேன்
கிரகங்கள் ஒன்பதும் நீ
இல்லையென பிதுக்கியன

உன் உருவத்தை
ஆட்கொண்ட அக்னியிடம்
வினவுகிறேன்..
அருவமான உன்னை
நிரப்பிய வெற்றிடத்தையும்
விசாரிக்கறேன்..

சிப்பிகள் விடுத்த
சப்தத்தினை ஒத்த
உன் சிரிப்பின்
ஒலிகளும்...
நீ
உச்சரித்த வார்த்தைகளும்
கலந்த காற்றிலும்
விசாரிக்கறேன்...

விழி திறந்து பார்க்கிறேன்..

எதுவாகவும் நீ இல்லை..
அப்படி எனில்
நீ என்பது எங்கே?

5 comments:

  1. ரொம்ப நல்லா இருக்குங்க...

    ///சிப்பிகள் விடுத்த
    சப்தத்தினை ஒத்த///
    இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு.

    கனவின் புதிர் கவிதையை இப்போதுதான் படிக்கிறேன்.
    அதுவும் மிக நன்றாக உள்ளது.

    ReplyDelete
  2. கவிதைகள் நன்றாகா இருக்கின்றன ஆச்சர்யம்ட்5ஹான் உங்கள் அறிமுகம் இல்லாதது நன்றி

    ReplyDelete
  3. romba romba thanxs ajayan...also am so happy and thnxs for ur visiting..:-)...

    எனக்கும் ஆச்சரியம்தான் உங்கள் அறிமுகம் கிடைத்தது பற்றி...!!!!:-)

    ReplyDelete
  4. வெண்பஞ்சு பதிந்த
    மேகத்திலும் அலைகிறேன்
    கிரகங்கள் ஒன்பதும் நீ
    இல்லையென பிதுக்கியன

    super lines...
    nice keep it up

    ReplyDelete