
சன்னல் சட்டங்களை
பற்றியபடி
பதிந்த விரல்கள்..
சற்று மேல்
இரு புள்ளியாய்
சிறுத்த கண்கள்
எப்பொழுதும்
தென்படுகிறது
அவ்வீட்டினில்...
அக் கண்களின் ஏக்கங்கள்
வாடைக் காற்றை கிழித்து
நேர் கோடாய்
நிறுத்தப்படுகிறது
அவ்வீதியினில்...
நிரம்பப்பெறா
ஆசைகளைக் கொண்டு
நிரப்பியிருந்தது
அவள் வயது
நா வெட்டென...
கரு வனத்தினுள்
முளைத்த
வெண் கம்பிகளும்..
வலிகள் பிரசவித்த
கோடுகள் பதிந்த
முகமுமே
நிர்ணயித்தன
அவளது விலையை...
பரிகாரங்கள்
ஏதுமில்லா அவளது
கோவில் பிரவேசங்கள்
சாட்சியாயிருந்தன
செவ்வாய் தோஷமும்
இல்லையென..
பூச்சுகள் உதிர்ந்த
சுவர்களும்
கம்பிகளில் தொங்கும்
நிறம் மங்கிய கிழிசல்
ஆடைகளும்
ஒப்புக்கொண்டன
இயலாமை என்பதை...
ஆனந்த பைரவி
கல்யாணி ராகங்களில்
அரும்பிய காதல்களை
சஹானாவிலும்
முகாரியிலும்
தொலைத்திருந்தாள்..
எவர் பிடிக்கவில்லை
என்றாலும் அவள்
விசனப்பட போவதில்லை...
சன்னல் சட்டங்களுக்கு
அப்பால் செல்லும்
ஏதோ ஓர் ஆண்மகன்
அவளது
அன்றைய இரவின்
ராஜ குமாரனாய்
இருக்கப் பெறுகிறான்...
தற்காலிகமாய் அது
போதுமானதாகியிருந்தது
விதி எழுதிய
அவளது வலிகளை
அழிக்க...
எப்பொழுதாவது
அவ்வீதியின் வழியே
நீங்கள் போக நேரிடலாம்...
அவள் விடுத்த
கனவுகளும் ஆசைகளும்
வீதியில்தான் அலைகிறது..
அதன் வாசத்தை நீங்கள்
நுகர நேரிடலாம்...
அதன் மீது
மோதிட நேரிடலாம்...
அவ்வாறெனில்...
ஒரு கணம்
அச் சன்னலை
பார்த்துவிட்டுச்
செல்லுங்கள்...
அன்றிரவு
அவள் கனவின்
ராஜ குமாரன்
நீங்களாகவும்
இருக்கலாம்...!!!
நல்ல சிந்தனை வரிகள் அக்கா ...,
ReplyDeleteவார்த்தைகள் வைரமாய் மின்னுகிறது உங்கள் கவிதையில் ...
எவர் பிடிக்கவில்லை
என்றாலும் அவள்
விசனப்பட போவதில்லை...
சன்னல் சட்டங்களுக்கு
அப்பால் செல்லும்
ஏதோ ஓர் ஆண்மகன்
அவளது
அன்றைய இரவின்
ராஜ குமாரனாய்
இருக்கப் பெறுகிறான்...
வசிக்கும் போது
புரிகிறது
அவளின் வலிகள் ....,
நல்ல முயற்சி
வாழ்த்துகள் அக்கா
hahahaha.....அந்த சன்னலின் விலாசம் கொடுங்கள்...hemi....
ReplyDeleteromba romba thankspa....
ReplyDelete@sebha
ஹா ஹா செபா எல்லா ஊரிலும் அந்த சன்னல் இருக்கும்..தேடி பாருங்க....:-)..thank u...
உறையச் செய்த வரிகள்
ReplyDeleteஅன்றிரவு
அவள் கனவின்
ராஜ குமாரன்
நீங்களாகவும்
இருக்கலாம்...!!!
thank u so much geetha for visiting and commenting..:-)
ReplyDeleteவணக்கம்....!!! "தினமொரு ராஜகுமாரன்" என்ற இந்த கவிதை தொகுப்பு ஒரு அருமையான பகிர்வு அழகிய தமிழ் வரிகளை செதுக்கி ஒரு பெண்ணின் உணர்வை வடித்த பெண் சிற்ப்பியாய் நீங்கள்....!!! வரிகளில் உயிரோட்டம் மிகுதி....!!! உங்கள் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது....!!! தோழிக்கு என் வாழ்த்துக்கள்.....!!!!!
ReplyDeleteவிதி எழுதிய
ReplyDeleteஅவளது வலிகளை
அழிக்க...