நீள் பாதையில் பூத்திருக்கும்
பெயர் தெரியா பூக்கள்
பறக்கும் மேகம்
உதிரும் நட்சத்திரம்
கருஞ் சிவப்பில் உலகம்
பெரும் நகரத்தினுள்
வழி தொலைத்து
அலைந்து திரிந்து
தேடலின் போது கண்
விழித்துக் கொண்ட தருணம்..
சர்ப்பங்கள் பிணைந்த காடு
நீரினில் மிதக்கும் நிலவு
காசுகள் புதைந்த நிலம்
பிணங்கள் குவிந்த சாலைகள்
என
நடு இரவினில் திறக்கும்
கனவுச் சிறையினில்
பல பல கனவுகள்
வர்ணம் தீட்டி
விடுபடுகின்றன..
சிறு கவிதைக்கு
வித்திட்டுச் செல்கின்றன...
கவிதைக்கேற்ற பட தேர்விற்கு முதலில் வாழ்த்துகள்
ReplyDelete//சர்ப்பங்கள் பிணைந்த காடு
நீரினில் மிதக்கும் நிலவு
காசுகள் புதைந்த நிலம்
பிணங்கள் குவிந்த சாலைகள்//
கொடுங்கனவுதான். கனவாக மட்டுமே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
//சிறு கவிதைக்கு
வித்திட்டுச் செல்கின்றன.//
எழுதியே தீர்க்க பாருங்கள் .. ஹேமி .. வாழ்த்துகள்
நல்லாயிருக்குங்க.
ReplyDeleteஅருமை சகோ
ReplyDeleteவாழ்த்துக்கள்
விஜய்
எல்லாக் கவிதைகளையும் வாசித்துவிட்டேன்...பிரமாதம்...தொடர்ந்து வாசிக்கிறேன்....வாழ்த்துக்கள்...
ReplyDeleteநடு இரவினில் திறக்கும்
ReplyDeleteகனவுச் சிறையினில்
பல பல கனவுகள்
வர்ணம் தீட்டி
விடுபடுகின்றன..
சிறு கவிதைக்கு
வித்திட்டுச் செல்கின்றன...
////////////
NICE LINES
கற்பனைகளும் கனவுகளும் கவிதைகளுக்கு வித்து பெரும்பாலும்... நல்லாயிருக்கு உங்க மற்ற கவிதைகளும்...
ReplyDelete@vel kannan
ReplyDelete@jagatheesan
@vijay
@raja
@prabu
@tamilarasi
thank u so much for visiting and for ur feed back..thanks a lot..:-)
நடு இரவினில் திறக்கும்
ReplyDeleteகனவுச் சிறையினில்
பல பல கனவுகள்
வர்ணம் தீட்டி
விடுபடுகின்றன..
சிறு கவிதைக்கு
வித்திட்டுச் செல்கின்றன...
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.
thank u so much vijay mahendiran..:-)
ReplyDelete