தனிமை சுவாசத்தை
விரும்பி சுவைக்கும் நீ
வலிய வெதும்புகிறாய்
இழந்த ஒற்றை சிறகிற்காய்
திசை தெரியா பறவையின்
உணர்தலுக்கு நிகர்போல்..
கிழித்தெறியப்பட்ட முகமூடியின்
துணுக்குகளில் ஒட்டியிருக்கும்
நச்சினால் நிறமிழந்தபடியே
காற்றாகிய நான்
இருள் அப்பியிருந்த
உன் அறையினுள்
தூசி படர்ந்த ஒளியாய்
நுழைகிறேன் மெல்ல...
எப்பொழுதும் போல் அப்பொழுதும்
அதே பார்வையில் நிதர்சனமாய்
வீசப்படுகிறேன் உன் மேல்...
திசை தெரியா பறவையின்
ReplyDeleteஉணர்தலுக்கு நிகர்போல்..//
கிழித்தெறியப்பட்ட முகமூடியின்..//
எப்பொழுதும் போல் நிதர்சனமாய்
வீசப்படுகிறேன் உன் மேல்... //
சொற் கையாடல் மிகவும் அழகு ..
thank u arumukam
ReplyDeleteகவிதை மிகவும் நன்றாக இருக்கிறது ...தொடருங்கள்..
ReplyDeletemikavum nanri kamalesh..!!
ReplyDelete