
நெடு நாட்கள் பின் காண
நேரிடும் முன்னாள்
காதலனை -பேச
நிகழுமொரு சந்தர்ப்பம்தனை
விரல்களை பிசைந்தோ
கைப்பையை துழாவியோ
அசௌகர்யத்தை உணர்த்த...
அவனும் உணர்ந்து
அவளைகடக்கிறான்
ஓர் வழிப்போக்கனாய்..
தூரம் கடந்த பின்
திரும்பி பார்த்து
நலம் விசாரிக்கிறது
அவர்கள் பார்வைகள்
ஏனோ ஏக்கமாய்...
மறக்கப்பட்ட காதல்கள்
ஜீவித்துக் கொண்டுதான்
இருக்கின்றன இன்னொருவனை
மணக்கும்போதும்....
காதலனையே மணந்துபின்
காலம் கொடுத்த
உண்மைகளை -வலிய
மறுக்கப்பட்டபோதிலும்....
திணிக்கப்பட்ட
யதார்த்தங்கள்
கசந்து உமிழத்
தொடங்குகின்றன ...
கழட்டி எறியப்பட்ட
அவர்களின் முகமூடிகளில்
மிச்சமிருந்த காதல்களும்
மரணித்துக் கொண்டிருக்கின்றன...
திணிக்கப்பட்ட
ReplyDeleteயதார்த்தங்கள்
கசந்து உமிழத்
தொடங்குகின்றன ...
கழட்டி எறியப்பட்ட
அவர்களின் முகமூடிகளில்
மிச்சமிருந்த காதல்களும்
மரணித்துக் கொண்டிருக்கின்றன... //
அருமையா இருக்கு..
thank u very much arumukam....nice commnt..:-)
ReplyDeleteஅருமை, வாழ்த்துகள்
ReplyDeleteசுமைகள் தாங்கிய சுவடுகள் ஒவ்வொரு மனதிலும் இருப்பதை அழகாய் சொல்லிருக்கிங்க தோழி ..வாழ்த்துக்கள் :)
ReplyDeletethank u vasu
ReplyDeletethanks a lot GK...
எந்த வரியை..அருமை என்று மேற்கோள் காட்டலாம் என்று..மேலும் கீழும் ஏறி இறங்கியதுதான் மிச்சம்...
ReplyDeleteஅனைத்துமே..அற்புதமாய் இருக்கும்போது...
எதை மேற்கோள் காட்டி உணர்த்துவது...
முரண் என்ற தலைப்பில்...சற்றும் முரணில்லாமல் அற்புத வரிகளை பதித்திருக்கும் உங்களது..
பதிப்பு இன்னும் தொடரட்டும்...
வாழ்த்துக்களுடன்...செபா...
thank u very much sabha for the visiting and for ur comment...
ReplyDelete