
கரை படிந்த பற்களினூடே
வெறுமையுடன் சிரித்து
வியர்வையில் கண்ணீரும்
கலந்து வெளியேற
வெறும் பாதம் தேய
வீதியில் கூவி பழங்களை
விற்கிறான் அவன்
வட்டிகளை அடைத்திடனும்
சிறு வீடொன்று கட்டிடனுமென
கனவுகள் நிறைய அவன்
கண்களில் தெரிய
நடத்துகிறான் நாட்களை....
பட்டிணத்தில் படிக்கும் மகன்
மன சுமையை இறக்குவானென
தலையில் சுமையை
தாங்கியபடி கூவி
கொண்டே செல்கிறான் அவன்...
தந்தையின் கனவறியா மகன்
தறி கெட்டு செல்லும் பாதைக்கு
வழி கேட்டு செல்கிறான்..
மது மாது போதையில் தந்தைதன்
உணர்வுகளை எரிக்கிறான்..
தந்தையின் கனவுகளை
வீதியில் விற்கிறான்...
விடை தெரியா கனவுகள்
விடை பெற்றுக் கொள்கிறது
மெல்ல மெல்ல.....
கவிதை அருமை.
ReplyDeleteHei Akka, Semaya irukku po... kalakkitta nee...
ReplyDeleteU r very correct ts is good one for our generations ka...
keep rocks ka...
akka, where is my comment.. I have posted at morning but nothing here... what happen?
ReplyDelete@வாசு
ReplyDeleteமிகவும் நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு..திருத்திக் கொண்டேன் நீங்க சொன்னவற்றை..
@பாலா
ரொம்ப நன்றிடா..உன் பின்னோட்டம் நன்றாக உள்ளது...
தந்தையின் கனவுகளை
ReplyDeleteவீதியில் விற்கிறான்...
விடை தெரியா கனவுகள்
விடை பெற்றுக் கொள்கிறது
மெல்ல மெல்ல..... //
class..
thank u arumugam
ReplyDeleteவலிக்கத்தான் செய்கிறது மனம்..
ReplyDeleteஎன் மகன் எனைத் திட்டும் போது ,
என் தந்தையை நினைத்து...
வலிகளையும் அழகா சொல்லிருக்கிங்க தோழி ..வாழ்த்துக்கள் ஆயிரம்