Tuesday, March 9, 2010

ஒற்றை காட்டுப் பூ !!!




சிறு ஓடையின்
சல சல வென
ஓட்டத்தில்
மென்மையடைந்த
கூழாங்கற்கள்
ஓடையுடன் இசைந்து
தாளமிட....

பட படவென
பறந்த பறவைகள்
விட்டுச் சென்ற
சிறகுகள்
காற்றில் நடனமாட

குட்டி ஒன்றை
தொலைத்த மானொன்று
திரிந்தாட...

இரவு பகல் பார்த்தறியா
ஊர்ந்து வரும் ஜந்துக்கள்...

வேட்டை முடிந்து
இளைப்பாறும் மிருகங்கள்.....
மீதமான சதைகளை
நோட்டமிடும் வல்லூறுகள்...

இரவினில் அலறும்
ஆந்தை கூட்டமொன்று
திகிலை பரப்பியது...

நிலவின் கரிசனம்
காய்ந்த சிறகுகளின் மீதும்
பட்டு ஜொலித்தது..
மரங்களின் சண்டைகளில்
பற்றி எரிந்தது காடு...

இத்தனை ஆரவாரங்களிலும்
மயான அமைதிகளிலும்
ஓசை இல்லாமல் பூத்த
ஒற்றை பூ காட்டினையே
மணக்கச் செய்ததாம்!!!

3 comments:

  1. நிலவின் கரிசனம்
    காய்ந்த சிறகுகளின் மீதும்
    பட்டு ஜொலித்தது.. // அட..


    இத்தனை ஆரவரங்களிலும்
    மயான அமைதிகளிலும்
    ஓசை இல்லாமல் பூத்த
    ஒற்றை பூ காட்டினையே
    மணக்கச் செய்ததாம்!!!

    அழகு.. :)

    ReplyDelete
  2. கவிதை நன்றாக இருக்கிறது.

    //ஆரவரங்களில்// ஆரவாரங்களில் என திருத்த வேண்டும்.

    ஓசையில்லாமல் பூத்த
    ஒற்றைப்பூ
    காட்டையே மணக்கச் செய்கிறது
    மயான அமைதிகளிலும்
    இத்தனை ஆரவாரங்களிலும்

    இப்படியிருந்தால் இன்னும் அழகாக இருக்கும்.

    ReplyDelete
  3. @ஆறுமுகம்
    ரொம்ப நன்றி உங்கள் வாசிப்பிற்கு ஆறுமுகம்
    @வாசு
    மிகவும் நன்றி..தவற்றை திருத்திக் கொண்டேன்.
    தங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றிகள்

    ReplyDelete