Tuesday, January 27, 2015

காதல் மரங்கள்!!



என் ஆழ் மனதினுள்
ஆழ்ந்திருக்கும்
உன் மீதான என் காதலை
மிகச் சிறியதே ஆன ஒரு
கண்ணாடிக் குடுவையினுள்
அடைத்து விட்டிருக்கிறேன்..!!

என்றாவது ஓர் நாள் அது
திறக்கப்படும் சமயத்தில்
குபீரென விஸ்தரித்து
அண்டத்தினுள் அடக்க
முடியா பிம்பமாய்
மிளிரக் கூடும்!!

இருப்பினும்
அடைப்பட்டே கிடக்கிறது
என் மனதினுள்!

சிறு தேடுதலில்....
கண்ணற்றவனின் கைகளில்
கண்ணாடிச் சில்லுகளிடையே
அகப்படும் ரோஜாவின்
மென்மை போல்
கிடைக்கப்பெற்றது
உனது நட்பு.!!

எனது நெடுந்
தோல்வியின் தடயங்களை
உன் மென்கைகள் கொண்டு
அழித்தாய் நிதானமாக..

அழும் சமயங்களில்
கண்ணீர் சுரப்பிகளில்
இனிய பானம் கலந்திட்டாய்

எனக்கான திசையை நோக்கி
உன் விரல் பற்றி
நடக்கச் சொன்னாய்..

நானும் நடக்கலானேன்
காதல் விதைகளை
தூவியபடியே...

சற்று இளைப்பாறி
திரும்பிப் பார்க்கிறேன்
வழி நெடுகிலும்
காதல் மரங்கள்!!

இன்று மலர்ந்த
மலரினுள் தங்கிய
பனித்துளி போல்
அத்தனை அழகானது
என் காதல்..!!

எதையும் விவரிக்க
இயலா கணங்களுடனே
அமைந்து விடுகிறது
உன்னுடன் இருக்கும் நேரங்கள்!!

உன் ஒவ்வொரு
சந்திப்பிற்கு பின்
என் மனம் சொல்கிறது
கண்ணாடிக் குடுவை
கனத்துக் கொண்டே
செல்கிறதென....

14 comments:

  1. காதல் விதையில் விளைந்த விருட்சங்கள்

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்

    ReplyDelete
  2. பின்னி பெடல் எடுக்கிறது என்பார்களே அது போல் இருக்கிறது உங்களின் இந்த கவிதை. வாழ்த்துகள்.
    விரைவில் கண்ணாடி குடவையிலிருந்து வெளியேற்றி விடுங்கள், சிதறி வெடித்தால் இந்த பேரண்டமே தாங்காது....

    ReplyDelete
  3. /எதையும் விவரிக்க
    இயலா கணங்களுடனே
    அமைந்து விடுகிறது
    உன்னுடன் இருக்கும் நேரங்கள்/

    நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  4. @vijay
    மிக மிக நன்றி தங்கள் பின்னூட்டத்திற்கு விஜய்...:-)

    @vel kannan
    ஹா ஹா ..பயபடாதீங்க...முயற்சி பண்றேன்...:-)..நன்றிகள் பல..

    @selvaraj jagatheesan
    மிக மிக நன்றி..உங்க வருகைக்கும் வாசிப்பிற்கும்...:-)

    ReplyDelete
  5. //கண்ணற்றவனின் கைகளில்
    கண்ணாடிச் சில்லுகளிடையே
    அகப்படும் ரோஜாவின்
    மென்மை போல்//
     
    அருமையான வரிகள்.
    குடுவையின் கனம் கூடக்கூட வாழ்தலின் சுவையும் கூடிக்கொண்டேயிருக்கும்.

    ReplyDelete
  6. @booraj
    thankspa..:-)

    @uzhavan
    thanks a lot for ur visit and feed back..:-)

    ReplyDelete
  7. சிறு தேடுதலில்....
    கண்ணற்றவனின் கைகளில்
    கண்ணாடிச் சில்லுகளிடையே
    அகப்படும் ரோஜாவின்
    மென்மை போல்
    கிடைக்கப்பெற்றது
    உனது நட்பு.!!

    எனது நெடுந்
    தோல்வியின் தடயங்களை
    உன் மென்கைகள் கொண்டு
    அழித்தாய் நிதானமாக..

    அழும் சமயங்களில்
    கண்ணீர் சுரப்பிகளில்
    இனிய பானம் கலந்திட்டாய்

    எனக்கான திசையை நோக்கி
    உன் விரல் பற்றி
    நடக்கச் சொன்னாய்..



    அக்கா உங்க கவிதையில் ஏதோ ஒரு உயிர் இருக்கிறது . . ,


    வாழ்த்துகள் அக்கா

    ReplyDelete
  8. 'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

    http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html

    create an archive and site map in 2 separate static pages

    http://ramasamydemo.blogspot.com/2010/09/create-archive-and-site-map-for-your.html

    five important blogs for bloggers
    http://ramasamydemo.blogspot.com/2010/09/5-important-blogs-for-bloggers.html

    Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு
    http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html

    ReplyDelete
  9. thank u so much rishan for ur visit and comment :-)
    @charles
    thank u so muchpa..

    ReplyDelete
  10. கவிதையில் மிக அழகானதொரு ஓட்டம் இருக்கிறது சகோதரி.
    மிக லாவகமாய் கையாளுகிறீர்கள் வரிகளை.
    கடைசி வரி வரை கணக்கும் கண்ணாடிக் குடுவையை
    சற்றும் சளைக்காமல் இறுக்க பிடித்தபடி
    தூக்கி வரும் இக்கவிதை மிக பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  11. காதல் மரங்கள்!!
    அருமையான வார்த்தை !

    ReplyDelete