
நெடுங் காலமாய்
மேல்கிடங்கிலிருந்த
அப்பழைய பெட்டியில்
செல்லரித்து காணப்பட்ட
ஏட்டினை தூசு தட்டி
பிரித்ததனில் என்
அம்மாவினுள் விளைந்த
எழுத்துக்களின் தடத்தினை
பற்றியபடி படிக்கலானேன்...
அவளது சிறு வயது
விழுப்புண் தழும்புகளையும்
மிக பிடித்தமான அவள்
தோழிகளின் நினைவுகளையும்
பருவ காலத்தில்
பனித் திவலை சுமந்த
புற்களை ரசித்த அந்த
அழகிய நாட்களையும்
ஆர்ப்பரித்த அலைகடல்
அவள் பாதங்களை
தழுவியபின்னும்
தங்கிவிட்டிருந்த வெண்
நுரைகளை பற்றிய
சிலாகிப்புகளும்
அப்பாவை சந்தித்த
முதல் தினத்தையும்
சில துக்கங்களையும்
சிற்சில ஆச்சரியங்களையும்
இப்படியாய் பல
நிரம்பப்பெற்றிருந்தது
அவ்வேடு முழுவதும்....
கூடவே அவளுள்
துளிர்த்திருந்த சிறு
காதலையும்
பொதித்திருந்தாள்
மிக ரகசியமாய்...
அருமை,
ReplyDeleteஅம்மாவின் சுவடு பதிந்த பக்கங்களை புரட்டி,புடம் போட்டு விட்டீர்கள் தோழி..நீங்கா ஒளிச்சுடராய் தாயின் நினைவுகள் படிக்கும் எங்கள் முன் பிரகாசிக்கிறது ...
ReplyDeletemika arumai!!!anaivarukkullm oru kaathal iranthu pin janikkirathu
ReplyDeletethank you so much VASU...GK... and uncle..
ReplyDeleteromba superah irukku sister
ReplyDeletethank u raja
ReplyDeleteஅருமை... வாழ்த்துக்கள் சகோ...
ReplyDelete