கூட்டலும் கழித்தலும்
இல்லாமல் ஏதுமில்லை
கணிதப் பாடமாகினும்
வாழ்க்கையாகினும்....
கூட்டலில் இருக்கப்பெறும்
இணக்கம் கழித்தல்
என்பதில் இல்லை....
அதிலும்
கடன் வாங்கி கழித்தல்
எவருக்கும்
விருப்பமற்றதாகிறது..
கணிதம் போலல்லாது
கொடுத்த கடனை
யாரும் கேட்காமல்
இருப்பதில்லை வாழ்க்கையில்!
சௌகரியங்களை கூட்டிக்
கொள்ளும் நாம் எதையும்
வேண்டாமென கழிப்பதில்லை
அப்படியே கழித்தாலும்
அதை வேறொருவர்
கூட்டிக் கொள்கிறார்..
கணிதத்தின் ஆதாரம்
கூட்டலும் கழித்தலுமே..
வாழ்க்கையின் ஆதாரம்
அத்தகையதே
ஜனனமும் மரணமுமாய்!!
நன்றாக உள்ளது சகோ
ReplyDeleteநீண்ட நாளாகி விட்டது பார்த்து, நலம்தானே
விஜய்
nice composition...equating life and math...good job...
ReplyDelete@ vijay
ReplyDeleteromba thxs..nan nalla irukken..neengalum nalla irukka kadavulai prathikkaren..
@shammi
thnq so much for visiting...
//கணிதம் போலல்லாது
ReplyDeleteகொடுத்த கடனை
யாரும் கேட்காமல்
இருப்பதில்லை வாழ்க்கையில்! //
fantastic comparision
thank u so much nagasubranaiyan
ReplyDelete