Tuesday, January 5, 2010

அவளாகிய தூண்டில் மீன்!


அவ்விருண்ட வீட்டிற்குள்
அவள்.....
கண்களில் வெளிப்பட்ட
கண்ணீர் தடம்
பதிந்து உலர்ந்து
கோடிட்டிருந்தது

நிலைக்குத்திய பார்வையில்
அடுத்து வருபவன்
எத்தகையவன் என்ற
மிரட்சி தென்பட்டது

எச்சிலை காணாமல்
நா வறண்டிருந்தது
மூச்சின் வெப்பம்
தாளாமல் தகித்தது
பிய்ந்திருந்த மேலுதடு

அம்மனையின்
அடியாட்களின்
தடியடியில் கன்றி
தடித்திருந்தது அவள்
கால்கள்!!

முன்னிரவில் நிகழ்ந்த
ஓர் மிருகத்தின்
மூர்க்கத் தாண்டவத்தில்
தோற்றுப் போயிருந்தன
பழக்கப்படாத அவளின்
பச்சை உடலும்,மனமும்

அடி வயிற்றில் ஏற்பட்ட
தாளா வலியினை
தன்னிச்சையாக
தடவிக்கொண்டிருந்தன
அவள் கைகள்!

இருள் ஒளி
பாராமல் நடந்த
வதைகள் மனதை
பதைத்துக் கொண்டிருந்தது!

கவனிப்பாரின்றி
கிடந்தது
அவளுக்குண்டான
பணமும்,உணவுகளும்....

கலைந்த கேசமும்
களைந்த ஆடையுமாய்
அவள் .....

அவள் முகம்
வெளிறிப் போயிருந்தது
அவ்வறையின் கதவு
மற்றொரு முறை

திறக்கையில்!!!!!!!!!!

( உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை )

14 comments:

  1. அருமையாக இருக்கிறது ...வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி Mr.கமலேஷ்

    ReplyDelete
  3. மிகவும் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்ட கவிதை..கவிதைக்கு நன்றி...

    ReplyDelete
  4. kavithai mikavum unarvupoorvamaaga irunthathu!!
    vetri pera vaalthukkal!!!

    ReplyDelete
  5. மிகவும் நன்றி உங்களின் கருத்துக்களுக்கு நண்பர்களே

    ReplyDelete
  6. உங்கள் தூண்டிலில் என் கைகளுக்குள் லாவகமாக சிக்கியவைகள்..

    // எச்சிலை காணாமல்
    நா வரண்டிருந்தது
    மூச்சின் வெப்பம்
    தாளாமல் தகித்தது
    பிய்ந்திருந்த மேலுதடு ..

    கவனிப்பாரின்றி
    கிடந்தது
    அவளுக்குண்டான
    பணமும்,உணவுகளும் ..

    அவள் முகம்
    வெளிறிப் போயிருந்தது
    அவ்வறையின் கதவு
    மற்றொரு முறை
    திறக்கையில் !! //

    மிக அருமையான கவிதை.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  7. Word verification எடுத்து விடுங்க..

    ReplyDelete
  8. மிகவும் நன்றி தங்களின் விமர்சனங்களுக்கு Mrஆறுமுகம் and Mrசதீஷ்

    ReplyDelete
  9. வலி..
    அழகான வார்ப்பு..
    வாழ்த்துகள் அக்கா..

    ReplyDelete
  10. antha padapadappu padikum pothum varukirathu..
    nalla padaippu all the best
    padma

    ReplyDelete
  11. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  12. thank u very much..padma...and sakthi yin manam..for ur visit and commnts...

    ReplyDelete