Tuesday, July 17, 2012

அகம் !!



மீண்டும் மீண்டும்
ஒரு நாடகத்தை அரங்கேற்ற
வேண்டியதாகிறது
அடித்த வலிகளும் ரணங்களும்
வடியும் முன்னே
மனதி லொழுகும்
உதிரத்தை துடைத்துக் கொண்டு
ஆணாதிக்கத்தின் முன்
மண்டியிட்டபடியே
புன்னகைத்து
அப்பொழுதே மறந்துவிட்டதாய்
நடிக்கிறேன்!!

2 comments: