Saturday, March 5, 2011

அதுவானது!!



பிறிதொருநாள் எதிர்பார்த்த
மழையானது
இன்றே தீவிரப்பட்டிருந்தது....
அது
முழுக்கக் கொட்டித்தீர்த்தது
ஓய்ந்து களைத்துப் போனது...

முன் வாசலில்
விரும்பி குளித்த
செவ்வந்தி மொட்டொன்றில்
வழிந்து கொண்டிருந்தது
மிகுதிப்பட்ட
நீரானது...

நீர்த் திவளைகள்
சிதறலாய் வரைந்திருந்தது
கண்ணாடி சன்னலில்

சுவை தேடும் எனது
நாவிற்கும் தேநீர்
கோப்பைக்கும் இடைப்பட்ட
தூரமானது
வெகுநிதானமாய் கடக்கப்பட்டது...

விலக்கி வைத்திருந்த
அவனது எண்ணங்களை
நேரமானது
மென்று கொண்டிருந்தது..

சன்னலின் வழியே
மௌனமாய் தீண்டிய
காற்றானது
அவனது முத்தம்தனை
ஞாபகப்படுத்திச் சென்றது..

அவன் மீதான கோபங்களின்
அடர்த்தி நீர்த்துப் போயிருந்தது...

லேசாகியிருந்தது
வானமானதும்
மனமானதும்...

நாளை
முன்வாசலின் செவ்வந்தி மொட்டு
விரிந்தபின் புன்னகைக்க கூடும்
மேசை மீதிருக்கும் இரு
தேநீர்
கோப்பைகளைக் கண்டு..

11 comments:

  1. தங்கள் கவிதை என்னுள் இதே போன்று
    ஒரு மழை நாளில் ஜன்னலோரம் அமர்ந்து
    ரசித்த மழையின் குளிர்ச்சியையும்
    சுவைத்த தே நீரின் இளஞ்சூட்டையும்
    நினைவுறுத்திப் போகிறது
    கவிதையின் வெற்றி என்பது அதுதானே
    நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. hemikrish, ஆழமான அன்பு எத்தகைய கோபத்தையும் ஊடலென நீர்க்கச் செய்துவிடுகிறது. அன்பில்லையெனில் சிறு கோபம் கூட வளர்ந்து பெரும் பகையாகிவிடுகிறது.

    ReplyDelete
  3. கவிதை காட்சியாய் கண்முன் விரிகிறது.

    இதுவே உங்கள் கவிதையின் வெற்றி

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்

    ReplyDelete
  4. நல்லாயிருக்குத் தங்கள் கவிதை.

    ReplyDelete
  5. /// அவன் மீதான கோபங்களின்
    அடர்த்தி நீர்த்துப் போயிருந்தது... ///

    மழை கோபங்களைக்கூட
    நீர்த்துப்போகச் செய்கிறதோ...

    நல்ல ரசனை...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. மழையின் சுவாசம்
    அவளின் ஸ்பரிசத்தின் தடத்தை
    முன்னொரு முறை இடைவேளை வரை
    முடிக்காத மழை ஞாபகத்தின்
    சலனம் வரும்
    இசையின் சாரல் என்
    பாடலின் கடைசி சந்தமும்
    உன் கவிதையின் புணர்ச்சி மனமும்
    தாலாட்டின் கதைகளை சொல்கிறது...
    மழைக்கா ஏங்கியவர்கள் பின்
    மழைக்கா காலத்தில்
    பிரிந்தார்கள்...
    அவர்கள் கொண்டு வந்திருந்
    குடையின் விரிசல்கள்
    வாசலில ....
    தனிமையை துயரமாக
    உன் கவிதையையும்
    எடுத்துக்கொண்டு பயனிக்கின்றது
    சேகியே....
    மாரி மகேந்திரன.
    கவிதை படித்த மறு நிமிடம் வந்து சென்ற எண்ணங்கள்......
    மாலை 6.19......

    ReplyDelete
  7. http://mahendran-marie.blogspot.com/2011/04/blog-post_25.html

    http://cinemaanma.wordpress.com/
    plz vist my blogs.

    ReplyDelete
  8. நல்ல முயற்சி அக்கா

    ReplyDelete